ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தூக்கு பாலத்தில் கோளாறு ஏற்பட்டதால் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட 2 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தூக்கு பாலத்தில் ஏற்பட்ட கோளாறால் அக்காள்மடத்தில் 2 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர். தூக்கு பாலத்தை உயர்த்தி மீண்டும் கீழே இறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
+
Advertisement