மாலத்தீவில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு: அதிபர் முய்சு திறந்து வைத்தார்
மாலே: மாலத்தீவின் வடக்கு பகுதியில் ரூ.7 ஆயிரம் கோடி இந்திய நிதியுதவியுடன் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஹனி மது சர்வதேச விமான நிலையத்தினை அதிபர் முகமது முய்சு நேற்று திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ‘‘வடக்கு மாலத்தீவின் திறனை திறப்பதற்கும் உலகளாவிய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய பங்காற்றும். இது வடக்கு பகுதியின் செழிப்பிற்கான நுழைவாயில். இது வெறும் விமான நிலையம் மட்டுமில்ல, பொருளாதார மாற்றத்தின் சின்னம்.
புதிதாகத் திறக்கப்பட்ட விமான நிலையம் சுற்றுலா, விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் வடக்கின் சமூக வளர்ச்சிக்கு மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றார். விமான நிலைய திறப்பு விழாவில் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு மற்றும் சிவில் விமான அமைச்சக உயர் அதிகாிகள் கலந்து கொண்டனர்.

