சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ம.நீ.ம.வுக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது? எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துக் கேட்டுள்ளார். மேலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது மநீம நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், ‘‘திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டேன் என சிலர் எங்கள் மீது விமர்சனம் வைக்கிறார்கள். இது கூட்டணி கிடையாது அதற்கு மேல் புனிதமானது. நீதிக்கட்சியில் இருந்து வந்ததுதான் திமுக. அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மய்யவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான். நாட்டை இடது, வலது என பிரிப்பதை ஒருபோதும் நாம் அனுமதிக்க கூடாது’’ என்றார்.
+
Advertisement