சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி , நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது. பராமரிப்பு பணி காரணமாக 10 விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். 8 விரைவு ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்படும்.
சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரெயில்வே பணிமனையில் நாளை 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் (8 மணி நேரம் 40 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு திருத்தணி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்டிரலில் இருந்து காலை 6.50, 7.45, 8.05, 8.40, 9.15, 9.35, 10.40, 11.30 மதியம் 12, 1, 1.50, 2.40 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்களும், திருவள்ளூரில் இருந்து காலை 6.50, 7.30, 8.10, 8.20, 8.30, 9.10, 9.25, 10.05, 11.30 மதியம் 1.05, 2.40, 3.05 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்டிரலில் இருந்து காலை 9.55, 11.45 மதியம் 2.15 ஆகிய நேரங்களில் திருத்தணி செல்லும் மின்சார ரயில்களும், மதியம் 12.40, 1.25 ஆகிய நேரங்களில் அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்களும், காலை 10.30 மணிக்கு கடம்பத்தூர் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.10, 11.15, மதியம் 12, 1.40 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், திருநின்றவூரில் இருந்து காலை 7.55 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
எண்ணூரில் இருந்து காலை 6.35 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 12 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், ஆவடியில் இருந்து காலை 5 மணிக்கு எண்ணூர் வரும் மின்சார ரெயிலும் என மொத்தம் 49 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து ஆவடி மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில்கள் இருமார்க்கமாகவும் வழக்கமான அட்டவணைபடி இயங்கும். வருகிற 23-ந்தேதி மதியம் 12.10 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் பட்டாபிராம்-திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது


