பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
சென்னை : சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் இடையே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக நாளை 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செப்டம்பர் 7 இரவு 8:00 மணி முதல் செப்டம்பர் 8 அதிகாலை 4:00 மணி வரை இந்த ரயில்கள் இயக்கப்படாது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள புறநகர் ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து நாளை மாலை 6.45, இரவு 8, 9.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மூர் மார்கெட்டில் இருந்து நாளை இரவு 7.35, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.