மகிந்திரா நிறுவனம் புதிய தார் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இது 3 வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 152 எச்பி பவரை வெளிப்படுத்தக் கூடயது. 1.5 லிட்டர் டீசல்இன்ஜின் 119 எச்பி பவரையும், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் 132 எச்பி பவரையும் வெளிப்படுத்தும்.
தோற்றத்தை பொறுத்தவரை காரின் நிறத்தில் முன்புற கிரில்கள், டூயல் டோன் முன்புற பம்பர்கள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே, பின்புறம் வைப்பர், வாஷர், கேமரா ஆகிய அம்சங்களும் உள்ளன. இதில் 5 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்ட சுமார் ரூ.9.99 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.16.99 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.