மகாராஷ்டிரா: விநாயகர் சிலை கரைப்பின்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு சிலைகளை மூழ்கடித்தபோது நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாகி குர்தில் உள்ள பாமா நதியில் இரண்டு பேரும், ஷெல் பிம்பல்கானில் ஒருவரும், புனே கிராமப்புறத்தின் பிர்வாடியில் உள்ள ஒரு கிணற்றில் மற்றொருவரும் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரில் இருவரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடைவிடாத மழை காரணமாக ஆறுகள், ஓடைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகமாக அதிகரிப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.