மகாராஷ்டிரா: விநாயகர் சிலை கரைப்பின்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாகி குர்தில் உள்ள பாமா நதியில் இரண்டு பேரும், ஷெல் பிம்பல்கானில் ஒருவரும், புனே கிராமப்புறத்தின் பிர்வாடியில் உள்ள ஒரு கிணற்றில் மற்றொருவரும் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement