கட்சிரோலி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மற்றும் சட்டீஸ்கரின் நாராயன்பூர் மாவட்ட எல்லைக்கு அருகே உள்ள கோபர்ஷி வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கடந்த 25ம் தேதி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் வனப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 8 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 நக்சல்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நக்சலின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
+
Advertisement