சென்னை: சென்னை: 21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு 20ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது.
இது தொடர்பாக போக்குவரத்துதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
21/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு 20/09/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன்படி வருகின்ற 21/09/2025 அன்று மகாளய அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்க ளூரிலிருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில் வருகின்ற 20/09/2025 சனிக்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு. திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் மற்றும் 21/09/2025 இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேற்கூறிய இடங்களில் இருந்து WWW.tnstc.in மற்றும் TNSTC official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. என கூறப்பட்டுள்ளது.