Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: நேற்று 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், தஞ்சாவூர் பிரகதீசுவரர், திருநெல்வேலி நெல்லையப்பர், பேரூர் பட்டீசுவரர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆகிய 7 கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாய் கொண்டாடப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சார்பில் கபாலீசுவரர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி பெருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக மங்கள இசை மற்றும் திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, சிவ சதீஷ்குமார் சிவன் அருள் என்னும் ஆன்மிக சொற்பொழிவும், கதக் நடனம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, சிவன் பக்தி பாடல்கள், மார்க்கண்டேய சரித்திரம் ஹரிகதை, அன்பே சிவம் எனும் தலைப்பில் மோகனசுந்தரம் சொற்பொழிவு, தெய்வ சேக்கிழார் நாடகம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம், பறை இசை, தப்பாட்டம், தாளவாத்திய சங்கமம், பக்தி திரை இசை பாடல்கள் நிகழ்ச்சி, கயிலாய வாத்தியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், மங்கையர்க்கரசி, ரேணுகாதேவி, முல்லை, கவெனிதா பங்கேற்றனர்.