ஆடி மாதம் என்றில்லாமல் வருடந்தோறும் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு சலுகைகள் மற்றும் இறுதி பில்லிலிருந்து ஒரு தொகை தள்ளுபடி வசதிகளை வழங்கும் மொபைல் செயலி தான் “மேஜிக் பின்” (MagicPin). உணவகம், ஜவுளிக் கடை, பார்லர், மால்கள் போன்ற இடங்களில் சலுகைகளைத் தேடி பயன்படுத்த உதவும் செயலி. இதில் உங்கள் செலவின ரசீதுகளை அப்லோட் செய்தால் புள்ளிகள் கிடைக்கும். அந்த புள்ளிகளை கூப்பன்களாக மாற்றி மீண்டும் உபயோகிக்கலாம். இதில் உள்ளூர் வணிகங்கள், பிராண்டுகள் பற்றிய விபரங்கள், விமர்சனங்கள், ரேட்டிங்குகள் போன்றவையும் கிடைக்கும். உங்கள் செலவுகளை கண்காணித்து தானாகவே சேமிக்கவும் பரிந்துரைகள் தரும்.
வாடிக்கையாளர்களுக்கு அதிக சேமிப்பு வாய்ப்பு, வணிகர்களுக்கு அதிக விற்பனை வாய்ப்பு வழங்கும். சில நேரங்களில் SMS அனுமதி மூலம் உங்கள் செலவுகளைத் திரட்டி புள்ளிகள் வழங்கும். சமூக ஊடகங்களில் பகிர்வதற்கும் பரிசுகள் கிடைக்கும். புது இடங்களைச் சோதிக்க, சலுகைகள் பெற, பில்களைசமர்ப்பிக்க உதவும் செயலி. இந்தியாவின் பல நகரங்களில் பரவலாக பயன்படுகிறது. Amazon, Myntra, Flipkart, உள்ளிட்ட பல ஆன்லைன் தளங்கள் Trends, Max, Lifestyle, zudio உள்ளிட்ட பல பிராண்டட் கடைகளிலும் கூட இதன் மூலம் பணம் செலுத்த மேற்கொண்டு தள்ளுபடிகள் கிடைக்கும் .
ஆடி மாதத்தில் உங்கள் அருகாமையில் அல்லது நீங்கள் அதிகமாக வாங்கும் கடைகளில் உள்ள தள்ளுபடிகள் குறித்த விபரங்களையும் நோட்டிபிகேஷன்களாக கொடுக்கும். மேலும் லொகேஷன் வசதியை பயன்படுத்த நீங்கள் எந்த கடைக்குச் சென்றாலும் உள்ளே நுழைந்தவுடன் அங்கே இருக்கும் சலுகைகள் குறித்த விபரங்களையும் உங்களுக்கு அலர்ட் மெசேஜாக கொடுக்கும். Google பிளே ஸ்டோரில் இலவசமாகவே இந்த செயலியை பெறலாம். உங்களது அந்தரங்க விவரங்களை இவர்கள் எடுப்பார்களோ என்கிற சந்தேகம் இருந்தால் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப்பரிவர்த்தனை கார்டுகளை இதில் இணைக்காமல் நேரடியாக இந்த செயலியில் ஸ்கேன் செய்துவிட்டு UPI வழியாக பணம் செலுத்தலாம்.