மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போதைய மாநகராட்சி கமிஷனர் புகாரில், மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இவ்வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை நடந்து வருகிறது. சொத்து வரி முறைகேடு புகார் எழுந்ததும், மாநகராட்சியின் 5 மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்தனர். இதனால் மண்டல அலுவலகங்கள் துணை கமிஷனரின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. மண்டல தலைவர்களுக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்திற்குள் மண்டல தலைவர் தேர்தல் நடத்தப்படாது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
+
Advertisement