மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'சொத்துவரி முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. உயர்நீதிமன்றம் விசாரித்து வருவதால் அதில் தலையிட விரும்பவில்லை' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.