மதுரை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மதுரை வேலம்மாள் குழுமம் தங்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக மேற்கூரை வசதியுடன் கூடிய கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் ரூ.325 கோடி செலவில் அமைந்துள்ள இந்த மைதானத்தை நாளை (அக். 9) காலை 9 மணியளவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி திறந்து வைக்கிறார்.
+
Advertisement