மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை போலீஸ் கைது செய்தது. மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்து பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரிந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். பில் கலெக்டர்கள் உட்பட 19 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இம்முறைகேடு வழக்கை நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் என்பவர் இன்று ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.