மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மடத்தின் தம்பிரான் மனு அளித்தார். மதுரை ஆதீனத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கும் மரபுகளை தற்போதைய ஆதீனம் மீறுகிறார். மதுரை ஆதீன மட விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட வேண்டும். மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால் ஆதீன மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும். வழக்கில் இருந்து விடுபட்ட பின்னரே மதுரை ஆதீனம் தனது பணிகளை தொடர வேண்டும். இந்துசமய அறநிலையத்துறை தலையிட்டு பிற அதீனங்களுடன் ஆலோசித்து இளைய சன்னிதானத்தை தேர்வு செய்ய வேண்டும். மதுரை ஆதீனமடத்தில் அரசியல் கலப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.
+
Advertisement