சென்னை: மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் காவல்துறை மனு தாக்கல் செய்தது. மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வருகிறது. மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக காவல்துறை மனு தாக்கல் செய்தது. கடந்த 20-ம் தேதி காலை 11.30 மணிக்கு மதுரை ஆதீன மடத்துக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. மதுரை ஆதீனம், அவரது ஆதரவாளர்கள் விசாரணை அதிகாரிக்கு ஒத்துழைப்பு தரவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
+
Advertisement