சென்னை : மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது, காவல்துறை தரப்பில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதால் மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது, என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement