சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தென்மண்டல இளைஞர் எழுச்சி மாநாடு வரும் 5ம் தேதி மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் நடக்கிறது. இதில், தென் மண்டலங்களை சார்ந்த 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் இளைஞர்களும், இளம்பெண்களும் லட்சக்கணக்கில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் மாநில தலைவர் அப்துல் கரீம், பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் இப்ராஹிம், மாநில தணிக்கை குழுத் தலைவர் சுலைமான், மாநில மேலாண்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், தென்மண்டல மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
+
Advertisement