மதுரை: மதுரையில் ஆக. 25ம் தேதி தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆக. 27ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதற்கு முன்பாகவே மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு எனவே மதுரை மாநாட்டை வேறு தேதியில் மாற்றி நடத்த சாத்தியம் உள்ளதா என போலீசார் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு விளக்கம் அளிப்பதற்காக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று மதுரை எஸ்பி அலுவலகத்திற்கு நிர்வாகிகளுடன் வந்தார்.
எஸ்பி அரவிந்தனை சந்தித்து மாநாடு தேதி மாற்றம் குறித்து விளக்கமளித்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘ஆக. 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், அதற்கு முன்பிருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளதால் மாநாட்டிற்கு பாதுகாப்பு தருவதில் சிரமம் உள்ளதாக கூறினர். ஆக. 18 முதல் 22ம் தேதிக்குள் வேறொரு தேதியை முடிவு செய்து தருமாறு கேட்டிருந்தனர். அதன்படி ஒரு தேதியை முடிவு செய்து மனுவாக வழங்கியுள்ளோம். இந்த தேதியை தவெக தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார்’’ என்றார்.