மதுரை: மதுரையில் ஒரே நாளில் இரண்டு குழந்தைகளை தெருநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கல் என்பவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய 7வயது பெண் குழந்தை உள்ளது. இன்று காலை அச்சிறுமி அவரின் தாத்தாவுடன் அருகில் இருக்கக்கூடிய பள்ளிக்கு நடந்து சென்றனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று அந்த சிறுமியின் மீது திடீரன்றி பாய்ந்தது. சிறுமியின் கன்னம், கால் மற்றும் தொடை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்படுத்தியுள்ளது.
அதுபோல மதுரையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருடைய 8 வயது மகன் இன்று அதே பகுதியில் இருக்கக்கூடிய அரசு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த பகுதில் சுற்றித்திரிந்த நாய் அந்த சிறுவனை தாக்கியது. அந்த சிறுவனின் கையில் நாய் கடித்ததால் காயங்கள் ஏற்பட்டது. இரண்டு வெவ்வேறு இடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் சுற்றித்திரிய கூடிய பல்வேறு தெருநாய்கள் பெற்றோருடன் வரக்கூடிய குழந்தைகள் மீது கடிப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
உடனடியாக தெருக்கள் முழுவதும் சுற்றித்திரிய கூடிய தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது உடனடியாக அதனை பிடித்து வேற இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பாக இந்த பகுதியில் இருக்கக்கூடிய நாய்களை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.