மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சொத்து விவரங்களை அறிக்கையாக கோயில் நிர்வாகம் ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்தது. அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக 1,234 ஏக்கர் நிலங்கள் உள்ளன. மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமாக 133 வீடுகள், 108 கடைகள் என 117 இனங்கள் சொத்துக்களாக உள்ளன. கோயில் தரப்பு தாக்கல் செய்த சொத்து விவரங்களில் சந்தேகம் இருந்தால் மனுதாரர் முறையிடலாம் என்றும், வரும் வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்று மனுதாரர் பார்வையிடலாம் என்றும் ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
+
Advertisement