அடுத்தாண்டு ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டம்: கோயில் நிர்வாகம் தரப்பு
மதுரை: அடுத்தாண்டு ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோயிலில் புது மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் டிசம்பருக்குள் முடிந்துவிடும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கோயில் இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் அறிக்கை அடிப்படையில் புது மண்டபத்தை புனரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.