மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு இருகிறார்கள். மதுரை மாநகராட்சி கிட்டத்தட்ட பலகோடி ரூபாய் வரி முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டு டி.ஜி.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் 19 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி 4 மண்டலம் தலைவர்கள் ஏற்கனவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள். இந்த மண்டலத்தில் மதுரை மாநகராட்சி உட்பட்ட பல்வேறு அதிகாரிகள், இங்கு இருந்து பணியில் மாறிச்சென்ற அதிகாரிகள், பணியில் இருக்கக்கூடிய பலரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனையடுத்து ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக மேலும் சங்கையா, பிரேம்குமார், லீமா ரோஸ்மேரி, ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த முறைகேடு நடைபெற்ற விவரங்கள் என்ன மாதிரியான சொத்து வரி முறைகேட்டில் தொடர்பாக கணினியில் இருக்கக்கூடிய பாஸ்வேர்ட் எவ்வாறு பயன்படுத்தி எவளோ இழப்பை ஏற்படுத்தி இருக்கிறர்கள், என்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.