மதுரை: மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட இடத்தில் முறைகேடாக போலி ஆவணங்கள் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், வீட்டு வசதித் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர், நகர்ப்புற திட்ட குழு இயக்குநர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மதுரை திருநகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 1979ல் மாடக்குளத்தில் 200 ஏக்கரில் எல்லிஸ் நகர் என்ற பெயரில் வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்பட்டது. சட்ட விதிகளுக்கு எதிராக பொது இடத்தை தனி நபருக்கு வழங்கியதை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
+
Advertisement