சென்னை: செப்டம்பர் 4ம் தேதி எனது தலைமையில் மதுரையில் மாநாடு நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவினர் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது; செப்டம்பர் 4ம் தேதி எனது தலைமையில் மதுரையில் மாநாடு நடைபெறும். வரலாற்றில் பதிவுசெய்யும் மாநாடாக செப்டம்பர் மாநாடு நடைபெற வேண்டும். மதுரை எப்போதும் நமக்கு ராசியான இடம். எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது மாநாட்டில் அறிவிக்கப்படும். நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை மாநாட்டில் அறிவிப்போம் என அவர் கூறினார்.
+
Advertisement