சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது என்ற இடைக்கால உத்தரவை அக்.27 வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நிலை குறித்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக மதுரை ஆதீனம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். மதுரை ஆதீனம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை ஆதீனம் பேச்சை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அப்படியே முடிந்திருக்கும் என நீதிபதி சதிஷ்குமார் கருத்து தெரிவித்தார்.
+
Advertisement