மதுரை: மதுரையில் யானை தந்தத்தை விற்க முயன்றதாக இடைத்தரகர்கள் 5 பேரை வனத்துறை கைது செய்தனர். போடி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த வடமலை ராஜபாண்டியன் என்பவரின் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்யப்பட்டது. வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மதுரை வளர்நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டது. 5 பேரை பிடித்து வனத்துறை விசாரணை நடத்தியதில் யானை தந்தத்தை விற்க முயன்றது அம்பலம் ஆனது.
+
Advertisement