பணி: லேப் டெக்னீசியன்: 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.20,000- 24,000.
தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி யில் டிப்ளமோ தேர்ச்சியும், 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெடிக்கல் லேப் டெக்னாலஜி பாடத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிக பட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இணைத்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும், சுய அட்டெஸ்ட் செய்து சிங்கிள் பிடிஎப் பைலாக மாற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2025.