Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் அலுவலகத் தூய்மையாக்கம் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ளசட்ட அலுவலர்களின் கட்டிடத்தில் தூய்மைப்பணி மேற்கொள்வதற்காக தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில், மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் அலுவலகம், மாநில அரசு குற்றவியல் அலுவலகம், கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகங்கள் உட்பட பல சட்ட அலுவலர்களின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அக்கட்டிடம் முழுமைக்கும் தூய்மைப்பணி மேற்கொள்ள தகுதிவாய்ந்த முன்அனுபவமுள்ள தூய்மைப்பணி மேற்கொள்ளும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் வரவேற்கப்படுகின்றன.

கட்டிடத்தைப் பார்வையிட 10.09.2025 தேதி வரை விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 19.09.2025 மேலும் அன்று மாலை 5.45 மணிக்குள் மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி ‘மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் அலுவலகம், (O/o. STATE STATE GOVERNMENT PLEADER) சட்ட அலுவலர்கள் கட்டிடம், உயர்நீதிமன்றம், சென்னை 600 104’. விண்ணப்ப உறை மேல் “அலுவலகத் தூய்மைப் பணிக்காக” எனக் குறிப்பிடவும். மேலும் விவரங்களுக்கு 044 - 2534 1024 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.