மாதவரம் கொசப்பூர் மேம்பாலத்தில் டிரான்ஸ்பார்மர் மீது செடி படர்ந்துள்ளதால் மின்சாரம் சப்ளை பாதிப்பு; மக்கள் தவிப்பு
மாதவரம்: சென்னை மாதவரம் கொசப்பூர் கால்வாய் மேம்பாலம் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், நிறுவனங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த டிரான்ஸ்பார்மர் மீது செடி, கொடிகள் படர்ந்து அடைத்துள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன்காரணமாக மின்சாரம் பாய்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது.
மேலும் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். திடீரென உயரழுத்த மின்சாரம் வருவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துவிடுகிறது. எனவே, டிரான்ஸ்பார்மர் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும் என்று விளாங்காடுபாக்கம் மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?