மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிஸ்டில்லா அளித்த புகார் மீதான விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு
சென்னை: திருமணம் செய்து ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராஜ ஜாய் கிரிஸ்டில்லா அளித்த புகார் மீதான விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் ஜாய் கிரிஸ்டில்லா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜாய் கிரிஸ்டில்லா கர்ப்பிணியாக இருந்ததால் விசாரணைக்கு அழைப்பதில் சிக்கல் இருந்தது என காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


