சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீதான திருமண மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிசில்டா வழக்கு தொடர்ந்தார். பிரபல சமையல் கலைஞரும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் தனனை 2வது திருமணம் செய்து ஏமாற்றியதாக சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் சிரிசில்டா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரின் படி கடந்த மாதம் ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோரிடம் மகளிர் ஆணையம் தலைவர் குமாரி விசாரணை நடத்தினர்.
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஜாய் கிறிசில்டா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். ஜாய் கிறிசில்டாவின் மனுவுக்கு வரும் 12 ஆம் தேதிக்குள் ஜாய் கிறி சில்டாவின் புதிய மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
