ரைசன்: மத்தியப்பிரதேசத்தில் தனியார் பள்ளியில் இந்தி எழுத்துக்களில் மத வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் ரைசன் மாவட்டத்தில் தனியார் மழலையர் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் முதல்வர் குரேஷி மாணவர்களுக்கான இந்தி எழுத்துக்கள் அட்டவணையில் மத வார்த்தைகளை பயன்படு்தி இருக்கிறார். இதற்கு இந்தி எழுத்தான ‘கா’ காபா, ‘மா’ மசூதி, ‘நா’ நமாஸ், என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில பாரதி வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், இந்த விவகாரம் கல்வி துறையுடன் தொடர்புடையது. மாவட்ட கல்வி அதிகாரிக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். முதல்வர் குரேஷி தனது தற்செயலாள தவறை ஒப்புக்கொண்டார்.