வயிறு நிரம்பினால் போதாது; சத்தான உணவாகவும் இருக்க வேண்டும் என்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: வயிறு நிரம்பினால் போதாது; சத்தான உணவாகவும் இருக்க வேண்டும் என்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் ஆற்றிய உரையில், எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றைக்கும் மறக்காது. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என உலகமே அழைத்தாலும், உணவுப் பாதுகாப்பின் காவலர் அவர். தான் கொண்ட அறிவை, அறிவியலை மக்கள் பசிபோக்க பயன்படுத்திய சிந்தனையாளர். வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது திராவிட மாடல் அரசு என தெரிவித்தார்.