சென்னை, செப்.5: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ராமலிங்கம், தலைவர் திருநாவுக்கரசு, கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் அரவிந்தன் ஆகியோர் கூறுகையில்,‘ செப்டம்பர் 7ம் தேதி இரவு வானில் முழு சந்திரக் கிரகணம் நிகழவிருக்கிறது. அன்று இரவு 8.58 மணிக்கு சந்திரன் பூமியின் புறநிழலில் நுழைகிறது. இரவு 9.57 மணிக்கு சந்திரன் பூமியின் கருநிழலில் நுழைந்து, பகுதி சந்திரக் கிரகணம் தொடங்குகிறது. இது அன்று அதிகாலை 1.26 மணி அளவில் கிரகணம் முடிந்து சந்திரன் கருநிழலை விட்டு வெளியேறுகிறது. இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.
+
Advertisement