குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது சிபின். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடி புதூர் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகள் சகாயசிபாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
காதல் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதில் சகாயசிபா கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சொல்வது வழக்கம். இதே போல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவருடன் சண்டை போட்டு விட்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று சகாயசிபா தங்கி உள்ளார்.
தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துவர மாமனார் வீட்டிற்கு சிபின் சென்றுள்ளார். மகளை காதலித்து திருமணம் செய்தவுடன் அவரை கொடுமை படுத்துவதாக கருதிய மாமனார் மருமகன் சிபின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் மருமகன் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதை வீட்டின் மாடியில் இருந்து கவனித்த மாமனார் ஞானசேகரன் மேலிருந்த படியை மருமகன் இடம் சண்டைபோட்டுள்ளார்.
வீட்டிற்குல் வரக்கூடாது என்றும் திரும்பி சென்று விடுமாறு கூறி உள்ளார். இதனால் மாமனார் மருமகன் இடையை வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாடியில் இருந்த ஹலோப்ளாக் கல் ஒன்றை எடுத்து கீழே வாசலில் நின்ற மருமகனின் தலையில் போட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத சிபின் ரத்தவெள்ளத்தில் மாமனார் விட்டு வாசலில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிபினை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிபினுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஞானசேகரனை அஞ்சுகிராமம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அந்த வழக்கை கொலைவழக்காக மாற்றியுள்ளானர். காதல் தம்பதி இடையில் குடும்ப பிரச்சனையில் மருமகன் தலையில் மாமனார் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.