லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
சென்னை: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கிறது. நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கான வாடகையை உடனுக்குடன் வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
