புதுடெல்லி: உலகப் புகழ்பெற்ற தொழில் நிறுவனமான இந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பி.இந்துஜா, லண்டன் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85. உலகளாவிய தொழில் வட்டாரத்தில் ‘ஜிபி’ என அழைக்கப்படும் கோபிசந்த் இந்துஜா, கடந்த சில வாரங்களாக வயது மூப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். கடந்த 2023ம் ஆண்டு தனது சகோதரர் சந்த் இந்துஜா மறைவைத் தொடர்ந்து, இந்துஜா குழுமத்தின் தலைவராக கோபிசந்த் பொறுப்பேற்றார். அவருக்கு மனைவி சுனிதா, மகன்கள் சஞ்சய், தீரஜ், மகள் ரீட்டா ஆகியோர் உள்ளனர். கடந்த 1914ம் ஆண்டு பரமானந்த் தீப்சந்த் இந்துஜாவால் மும்பையை தலைமையிடமாக கொண்டு நிறுவப்பட்ட இந்துஜா குழுமம், இன்று உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட பல்தொழில் நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் வங்கி ஆகியவை இக்குழுமத்தின் முக்கிய நிறுவனங்களாகும்.
+
Advertisement
