லண்டன்: இங்கிலாந்தில் ஐபிஎல் போட்டிகளை போல், ஒரு அணிக்கு 100 பந்துகள் என்ற வகையில் ஆடப்படும் ஹன்ட்ரட் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமானவை. இந்த போட்டிகளில் பங்கேற்று வரும் அணிகளில் ஒன்றான, லண்டன் ஸ்பிரிட்டின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார். இந்த பொறுப்பில், ஏற்கனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக, தினேஷ் கார்த்திக் செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக, லண்டன் ஸ்பிரிட் அணி இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், ‘லண்டன் ஸ்பிரிட் அணியில் தினேஷ் கார்த்திக் சேர்வது மகிழ்ச்சியான விஷயம். அவரது ஆழ்ந்த அனுபவம் எங்கள் அணி வெற்றிக்கு பேருதவியாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.
+
Advertisement


