Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்டியலின வாலிபர் மீது தாக்குதல் வன்கொடுமை வழக்கில் பாஜ நிர்வாகி கைது

காங்கயம்: பட்டியலின வாலிபர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய பாஜ ஒன்றிய பொது செயலாளர் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30), பாஜ தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர். ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம், காங்கயம் அருகே காந்தி நகரை சேர்ந்த சங்கர் (24) கடந்த பிப்ரவரி மாதம் இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதில் அட்வான்ஸ் ரூ.5 ஆயிரம் பிடித்தம் போக மீதி ரூ.45 ஆயிரத்திற்கு மாதம் ரூ.2400 வீதம் 21 மாதத்திற்கு தவணை கட்ட வேண்டும்.

சில மாத தவணை தொகையை அவர் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கரை நேற்று முன்தினம் பைனான்சில் பணியுரியும் 2 பேர் அலுவலகத்துக்கு வரவழைத்தனர். அங்கு இருந்த சதீஷ்குமார் பணத்தை கேட்டு ஜாதி பெயரை குறிப்பிட்டு, சங்கரின் முகம், கை, கால்களில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த சங்கர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சங்கர் தன்னை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்திய பாஜ நிர்வாகி சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.