Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீ+லைஃப்ஸ்டைல் ரொட்டீன்!

உங்கள் தினசரி வாழ்க்கை முறையை பதிவு செய்து , சீராக மாற்றி ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்க உதவும் செயலி. இந்த ஒரு செயலி உங்கள் உடல், மனம் மற்றும் தனிமனித வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவும்.இந்த செயலியில் உங்கள் பழக்கவழக்கங்களைப்பதிவுசெய்து, தினமும் அவற்றை செய்யும் விதமாக நினைவூட்டல் அமைக்கலாம். உதாரணமாக, காலை அதி நேரத்திற்கு எழுதல், சரியான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் குடித்தல், புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை அட்டவணைப்படுத்தி பழக்கமாக மாற்றலாம்.உங்கள் முன்னேற்றத்தை வாரம், மாதம் அடிப்படையில் கண்காணிக்க உதவும் ட்ராக்கிங் வசதி இதில் உள்ளது. நினைவூட்டல்களும், வண்ணம் மாறும் டாஸ்க் பட்டியலும் பயன்படுத்த சுலபமாகவும், கலர்ஃபுல்லாகவும் இருக்கும். இது குறிப்பாக தங்களின் நேர நிர்வாகத்தை (Time Management) மேம்படுத்த விரும்பும் மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் மன அழுத்தத்தைக்குறைக்க விரும்பும் யாருக்கும் மிகவும் உதவிகரமாக அமைகிறது.தினசரி பழக்கவழக்கங்களை நிர்வகிப் பதற்கான எளிமையான, செயலியாக ‘‘மீ+ லைஃப்ஸ்டைல் ரொட்டீன்’’ (Me+ Lifestyle Routine ) செயலி விளங்குகிறது.