ஆயுள் சிறை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்ட கைதியும் தண்டனை குறைப்புகோர உரிமை உண்டு: உச்சநீதிமன்றம்
டெல்லி: ஆயுள் சிறை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்ட கைதியும் தண்டனை குறைப்புகோர உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தில் 376 DA, 376DB பிரிவுப்படி ஆயுள் சிறை தண்டனை அனுபவிக்க தீர்ப்பு அளிக்க முடியும். 376 DA, 376DB பிரிவுகளின்படி தண்டிக்கப்பட்டவரும் தண்டனையை குறைக்க கோர முடியும். தண்டனையை குறைக்க கோருவது அரசியல் சட்டம் அளித்துள்ள சட்டபூர்வ உரிமை. 16 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்பவருக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்வது 376 DA. 12 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்பவருக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்வது 376 DB என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.