Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எல்ஐசியில் 841 அதிகாரி பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. அசிஸ்டென்ட் அட்மினிஸ்டிரேட் ஆபீசர்ஸ் (ஜெனரலிஸ்ட்ஸ்): 350 இடங்கள். சம்பளம்: ரூ.88,635/-. வயது: 01.08.2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை/முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. உதவி இன்ஜினியர்: 81 இடங்கள். (சிவில்- 50, எலக்ட்ரிக்கல்-31). சம்பளம்: ரூ.88,635/-. வயது: 21 முதல் 30க்குள். தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்,

3. சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்: 30 இடங்கள். சம்பளம்: ரூ.88,635. வயது: 21 முதல் 32க்குள். தகுதி: ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்து சிஏ படித்திருக்க வேண்டும். ஐசிஏஐ அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

4. கம்பெனி செகரட்டரி: 10 இடங்கள். சம்பளம்: ரூ.88,635. வயது: 21 முதல் 30க்குள். தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் சிஏ படித்திருப்பதோடு, ஐசிஎஸ்ஐ அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

5. அசிஸ்டென்ட் அட்மினிஸ்டிரேட் ஆபீசர் (அக்சூரியல்): 30 இடங்கள். சம்பளம்: ரூ.88,635. வயது: 21 முதல் 30க்குள். தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் அக்சூரியல் பிரிவில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

6. இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்: 310 இடங்கள். சம்பளம்: ரூ.88,635, வயது: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் லைப் இன்சூரன்ஸ் ெதாடர்பான தொழிற்கல்வி படிப்பை முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. அசிஸ்டென்ட் அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் (சட்டம்): 30 இடங்கள். சம்பளம்: ரூ.88,635. வயது: 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிஎல் படிப்புடன் பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

பொது/ஒபிசி பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள் குறைந்தது 55% மதிப்பெண்களும் பெற்று பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். முதற்கட்ட எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், கடலூர், தர்மபுரி, தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய மையங்களில் நடைபெறும். 2ம் கட்டத் தேர்வு சென்னையில் நடைபெறும்.எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.700/-. எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.85/-. இதை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

www.licindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.09.2025.