சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: நாடும், நாட்டு மக்களும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்காக சுதேசியத்தை கட்டியெழுப்பிய சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதருமான செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு நினைவுதினம். வழக்கறிஞராக, எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையையும், அவர்கள் கொண்டுவந்த கொடூரமான சட்டங்களையும் எதிர்த்து இறுதிவரை போராடி உயிர்நீத்த தியாகி வ.உ.சிதம்பரனாரின் பன்முக ஆற்றலையும் தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
+
Advertisement


