Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

இலைக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே முக்கியத்துவம் தரும் மலராத கட்சி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘எல்லாருக்கும், எல்லாமும் கிடைப்பதால் இருக்க வேண்டிய இடத்திலேயே இருக்காங்களாமே புதுச்சேரி க்ரைம் காக்கிகள்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரியில் எங்கு பார்த்தாலும் ஸ்பா, மசாஜ் சென்டர், வீடுகளை விடுதிகளாக்குவது தொடர்கதையாக இருந்து வருது.. இதை வைத்து புதுச்சேரி க்ரைம் காக்கிகள் கல்லா கட்டி வர்றாங்க.. மேலும் பல ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் கோலோச்சும் இவர்களை நிலைய அதிகாரிகள் கூட பகைத்துக்கொள்ள முடியாதாம்.. எல்லோருக்கும் டிரான்ஸ்பர் தரும் காவல்துறை தலைமையகம், இவர்களை பார்த்தாலே ஏன் நடுக்கம் என தெரியவில்லை. அப்படியே இடமாற்றம் செய்தாலும் இந்த உத்தரவை துளியும் மதிப்பதில்லையாம்.. வேலை செய்யும் ஸ்டேஷன் பெயர் வேறு, ஆனால் கலெக்‌ஷன் பார்க்கும் காவல்நிலையம் வேறு பகுதி என எப்போதும் போல வேலை செய்கிறார்களாம்.. தொடர்ந்து இடமாற்றமே இல்லாததால், ஒவ்வொருவரும் தனிக்காட்டு ராஜாக்கள்தான். இதனால் குற்றவாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டு, குற்றப்பிரிவு காவலர் யார், குற்றவாளிகள் யார் என்பதை பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு நகமும், சதையுமாக மாறிவிட்டனராம்.. இதுகுறித்து டிஜிபியிடம் கேள்வி கேட்கும்போதெல்லாம், அதெல்லாம் இடமாற்றம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதே பதிலாக வருதாம்.. எல்லாருக்கும், எல்லாமும் கிடைப்பதால் இருக்க வேண்டிய இடத்திலே இருக்கிறாங்களாம் க்ரைம் காக்கிகள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கால்நடை துறையில் உச்சப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருத்தர் மக்கள் எது சொன்னாலும் காது கொடுத்தே கேட்பதில்லையாமே எங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகரின் கால்நடைத்துறையில் உச்சப் பொறுப்பில் உள்ள அதிகாரியின் நடவடிக்கையால் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறதாம்.. பொதுவாக குறைதீர் கூட்டங்களில் கால்நடைத்துறையின் பல்வேறு கோரிக்கைகளையும் விவசாயிகள் தெரிவிக்கும்போதெல்லாம் அதன்பேரில் தனிக்கவனம் காட்டி, உரிய வழிகாட்டல்களை உயரதிகாரிகள் வழங்க அரசு உத்தரவிட்டிருக்கு.. இந்நிலையில், கடந்த முறை நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கா நகரில் உள்ள கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் போலி மருந்துகளாக வழங்கப்படுவதாகவும், போதிய தடுப்பூசி செலுத்துவதில்லை எனவும் விவசாயிகள் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாங்க.. ஆனால் தற்போது வரை இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் இப்பகுதி இலைக்கட்சியினரின் ஆதரவாளராக, ஆளும்கட்சிக்கு அவப்பெயரை தரும் வகையில் கால்நடை உச்ச அதிகாரி நடந்து கொள்கிறாராம்.. தூங்கா நகரத்து புறநகர் பகுதியைச் சேர்ந்த இலைக்கட்சி முக்கிய பிரமுகர் ஆதரவு தனக்கு இருப்பதால், யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற எண்ணத்தில் மக்கள் பிரச்னைகளை காது கொடுத்தே கேட்பதில்லையாம்.. தனது நடவடிக்கைகளால் கால்நடை அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் முதல் கால்நடை வளர்ப்போர் வரையிலும் அதிருப்தியை ஏற்படுத்திக்கிட்டு இருக்கிறாராம்.. இவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று, பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதில் போட்டோ எடுத்துக்கொண்டால் மட்டும் போதும் என்ற நினைப்பிலும், கால்நடை வளர்ப்போர் கோரிக்கைகளின் உண்மைநிலையை அறிவதில் ஆர்வமின்றியும் உள்ளதால், கால்நடை வளர்ப்போருடன் 13 வட்டாரங்களில் உள்ள உதவி அதிகாரிகளின் நிலையும் பரிதாபத்திற்குரியதாக இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உள்ளூர் பொலிடிக்கல், ஆபிசர்ஸ் ஆசியோட அதர் ஸ்டேட்ல இருந்து கனிமம் கடத்தல் ஜோரா நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டம் தமிழக- ஆந்திரா, கர்நாடக எல்லையில் உள்ளதால் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருது.. கஞ்சா, குட்கா, மதுபாட்டில்கள்னு கடத்தலை தடுக்க எத்தனை சோதனைகள் நடத்தினாலும், கடத்தல் அரங்கேறி வருதாம்.. இதுல குறிப்பாக பெங்களூர்ல இருந்து மதுபாட்டில்களை பேர்ணாம்பட்டு வழியாக கடத்திக்கொண்டு வந்து சேல்ஸ் செய்றாங்களாம்.. இது இப்படி இருக்க, தற்போது ஆந்திராவில இருந்து பட்டு, பாடி, காடுன்னு முடியுற எழுத்துகொண்ட ஸ்டேட் எல்லை வழியாக மணல், ஜல்லி கற்கள்னு கனிமங்களை கடத்தி லாரி, லாரியாக கொண்டு வந்து, வெயிலூர் மாவட்டத்துல ஜோரா சேல்ஸ் செய்றாங்களாம்.. மாவட்டத்துல உள்ள செக்போஸ்ட்களில் வைட்டமின் ப, அளவற்று பாயுதாம்.. இதனால யாரும் வாய் திறக்குறதில்லையாம்.. பகல், இரவுன்னு எந்த நேரத்துலயும் இந்த கடத்தல் தொடருதாம்.. இதுக்கு ஆபிசர்ஸ் ஆசி அதிகமா இருக்குதாம்.. இதனால தான் கனிம கடத்தல் ஜோரா நடந்து வருதாம்.. ஸ்டேட் ஆபிசர்ஸ் கவனிச்சாதான் இந்த கடத்தலுக்கு தீர்வு கிடைக்கும்னு டிபார்ட்மெண்ட்ல பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே மலராத கட்சியில் நெல்லைக்காரர் முக்கியத்துவம் கொடுப்பதால் மாஜிக்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருக்காமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் மலராத கட்சியில் மாஜி பிரதிநிதிகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வந்தார்களாம்.. மாஜி மாநில தலைவரான காக்கி சீருடைக்காரரின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் மாநில அளவில் கொடிகட்டியும் பறந்தார்களாம்.. அதில் நான்கெழுத்து கொண்ட மாஜி பிரதிநிதி ஒருவர் கவர்னர் பதவி வரை கனவு கண்டு செல்வாக்குடன் வலம் வந்தவராம்.. மற்றொரு மாஜியும் மவுசோடு இருந்தவராம்.. ஆனால் புது தலைவர் பொறுப்பேற்றது முதல் இரு மாஜிக்களும் இருக்கும் இடம் தெரியாமல் ஓரம் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறார்களாம்.. இலை கட்சியிலிருந்து வந்தவர் என்பதால் தான் சார்ந்த கட்சியிலிருந்து புதுசா வந்தவர்களுக்கே மலராத கட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம்.. தற்போது இலைகட்சி கூட்டணியில் மலராத பிரதிநிதிகள் போட்டியிடும் 23, 17 தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் ஒண்ணு வலைதளங்களில் வலம்வர அதில் இந்த மாவட்டத்திலோ இலை கட்சியிலிருந்து வந்தவர்தான் நிற்பார் என்றும், ஏன் தொகுதியின் பெயரும் சேர்த்தே போடப்பட்டு இருக்காம்.. இதையெல்லாம் பார்த்த மாஜி பிரதிநிதிகளோ புதுசா வந்த தலைவர் மீது இருக்கும் அதிருப்தியை காட்ட தங்களது ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்களாம்.. இதனால் விரைவில் தங்களது படையுடன் இரு பிரதிநிதிகளும் டெல்லி சென்று தலைமையிடம் முறையிடலாம் என்ற சலசலப்பு இரு கட்சி வட்டாரத்திலும் பரவலாக ஓடுகிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.