Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இலை கட்சி மாஜி மந்திரிக்கு வரும் மிரட்டல் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

‘‘எம்பி போர்வையில் இனியும் டெல்லி சந்திப்பை தொடர முடியாதுன்னு இலைக் கட்சி மாஜி அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்காமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் மலராத கட்சி முழுமையாக ஈடுபட்டிருக்காம்.. சேலத்துக்காரரின் தனிப்பட்ட பிரசாரம் மக்களிடையே எடுபடாததால் கோட்டையான மூத்த நிர்வாகி மூலம் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பதில் கவனம் செலுத்தினார்களாம்.. இதற்கு ஒத்துபோகாத சேலத்துக்காரரை டெல்லிக்கு அழைத்த மலராத கட்சியின் விஐபிக்கள் சில அறிவுரைகளை கூறி அனுப்பினார்களாம்.. ஆனால் சேலத்துக்காரர் விடாப்பிடியாக இருப்பதால், புரம் மாவட்டத்தில் மாஜி அமைச்சரை ஏவி விட்டு ஆவேசமாக பேச வைத்தார்களாம்.. கட்சிக்கு துரோகமிழைத்தவர்களை ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என்று கூற, யாரும் வீட்டுவாசல்ல காத்திருக்க வில்லை என பதிலடி அம்புபோல் வர, மீண்டும் மோதல் ஆரம்ப கட்டத்திற்கு சென்றதாம்.. மறுநாளே மாஜி அமைச்சரை தேடிச் சென்ற மலராத கட்சியின் தலைவரானவரின் சந்திப்பு ஏதோ மிரட்டலில் முடிந்திருப்பதாக தகவல் கசிகிறதாம்.. அதாவது நட்டா வருவதற்குள், இலைகட்சியில் பிரச்னை முடிந்திருக்க வேண்டுமென்பதுதான் உத்தரவாம்.. வாய்க்கு வந்தபடி உளறி, எம்பி போர்வையில் இனியும் டெல்லி சந்திப்பை தொடர முடியாது என்று டெல்லி விஐபிக்கள் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறதாம்.. ஒரு தாயின் பிள்ளைகளாக கட்சியில் வளர்க்கப்பட்டாலும் தற்போது நாம் வெவ்வேறு வளர்ப்பில் இருப்பதையும் மலராத கட்சி தலைவர் சுட்டிக் காட்டிவிட்டு சென்றிருக்கிறாராம்.. இந்நிலையில் மலராத கட்சி சார்பில் திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டு பேரும் ஒன்றாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.. ஆனால் கடைசி நேரத்தில் மலராத கட்சி தலைவர் பங்கேற்கவில்லையாம்.. இலை கட்சி மாஜி அமைச்சர் முணுமுணுப்போடு பங்கேற்று மலராத கட்சி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவரின் அருமை பெருமைகளை உரக்க பேசுகிற ஆளுங்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் டான் டான்னு அக்கவுண்ட்ல விழுதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரை டெல்லி ரொம்பவே மிரட்டி விட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. காரில் வெளியே வரும்போது முகத்தை துணியால் மூடிக்கிட்டு வெளியே வந்த பிறகு ஒவ்வொரு நாளும் இலைக்கட்சி தலைவர் அதிர்ச்சியில்தான் இருக்காராம்.. எம்ஜிஆர் சிலையை பார்த்து அண்ணா சிலை என சொல்வதாக இருந்தாலும், பாடல்களை பார்த்து படிக்கும்போதும் திணறுறாராம்.. இப்படியாக போய்கிட்டிருக்கும் நேரத்தில் மாஜி போலீஸ்காரரும் இலைக்கட்சி தலைவரை மிரட்டுவதற்கான ஏற்பாடுகளை செஞ்சிக்கிட்டு இருக்காராம்.. ஏற்கனவே அதிமுகவினரின் ஊழல் பைல்களை வெளியிடுவேன் என்றார். அது எல்லாமே மிரட்டலுக்கு தானாம்.. குட்டையை கலக்கி மீன்பிடிப்பது போலத்தான் அவரது முக்கிய வேலையாக இருந்ததாக அவரது கட்சிக்காரங்களே சொல்றாங்க.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவரை கொங்குகாரங்க நமக்கொரு தலைவன் கிடைத்துவிட்டான் என நம்புறாங்களாம்.. பச்சை மையில் கையெழுத்துபோட்ட மாஜி போலீஸ்காரரால் இதனை பொறுத்துக் கொள்ள மனம் மறுக்குதாம்.. அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டதால் அடுத்தக்கட்டமா என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கும் நிலையில், இலைக்கட்சி தலைவரை சும்மாவிடமாட்டேன் என்ற சபதமும் செஞ்சியிருக்காராம்.. இதனால் அவரது நண்பர்கள் யார் யார், பினாமிகள் யார் யார், எந்த கல்லூரியில் முதலீடு செய்திருக்கிறார் என்ற விவரங்களை தெரிந்தவர்களிடம் கேட்டு சேகரித்து வருவதாக கட்சிக்காரங்க பேசிகிறாங்க.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவரோ டெல்லியின் வேதனையை மறக்கும் வகையில் பிரசாரத்திற்கு போய்கிட்டிருக்காராம்.. இதற்காக ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்காம்.. அவர்கள் இலைக்கட்சி தலைவருக்காகவும், இலைக்கட்சிக்காகவும் அருமை பெருமைகளை உரக்க பேசணுமாம்.. இவ்வாறு பேசுவதற்கு மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளம் என முடிவு செஞ்சி அவர்களின் அக்கவுண்டில் டான் டான் என விழுந்திடுதாம்.. 25 பேர் அவர்களின் வலையில் சிக்கியிருந்தாலும், ரெண்டு பேர் மட்டும் காசு வேண்டாமுன்னு சொல்லிட்டாங்களாம்.. இந்த காலத்தில் இப்படியும் தொண்டர்கள் இருக்காங்களான்னு இலைக்கட்சி தலைவரே மூக்கின்மேல் விரலை வைக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொகுதியை கைப்பற்ற இலைக்கட்சியில் நடக்கும் மல்லுக்கட்டில் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் அணி மாறப்போறதா தலைமைக்கு இரண்டு பேர் மறைமுக சிக்னல் கொடுக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மெடல் மாவட்டத்தில் உள்ள காராச்சேவு தொகுதியை கைப்பற்றுவதில் இலைக்கட்சியில் ஒரே மல்லுக்கட்டு நடக்காம்.. இந்த தொகுதியில் மாஜிக்களான பெயரின் முன்னாள் கோட்டையை கொண்டவரும், மாஜி பால்வளத்திற்கு எதிராக கம்பு சுற்றியவருமான மன்னரின் மற்றொரு பெயரைக் கொண்டவரும், மாஜி சபாநாயகரின் தம்பியான மாவட்ட நிர்வாகியும் ரேஸில் படுவேகமாக போய் கொண்டிருக்கிறார்களாம்.. ஆனால், கோட்டையானவரும், ராஜாவானவரும் குக்கர்காரரிடம் போய் வந்தவர்கள் என்றும், மாவட்ட பொறுப்பில் உள்ள மாஜி சபாநாயகரின் தம்பி தற்போதும் பலாப்பழக்காரருடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் கிளப்பிவிடப்பட்ட தகவல் மாவட்டத்தை தாண்டி கட்சி தலைமை வரை சென்றுள்ளதாம்.. இதனால், மூன்று பேரையும் ரேஸில் இருந்து கழற்றிவிட்டுவிட்டு, புதிதாக ஒருவரை நிறுத்தலாம் என சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்.. இதற்காக பட்டாசு நகரத்தில் இருந்து வைட்டமின் ‘ப’ வசதியுள்ள தொழிலதிபர்களை தேடிக் கொண்டிருக்கிறதாம் கட்சி தலைமை. மேற்கண்ட பட்டியலில் ஏற்கனவே அணி மாறிய 2 பேர், ஒருவேளை தங்களுக்கு தொகுதி கிடைக்கவில்லையென்றால், மீண்டும் அணி மாறுவோமென தலைமைக்கு மறைமுகமாக சிக்னல் அனுப்பி உள்ளனராம்.. இதனால் காராச்சேவு தொகுதியில் அரசியல் காரம் கூடுதலாக உள்ளதாக பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.