லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் சின்னரும், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸும் மோதினர். இறுதிப் போட்டியில் சின்னர் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தினார். உலகின் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸை 3 மணி நேரம், 3 நிமிடங்களில் சின்னர் வீழ்த்தினார்.
Advertisement