உலக மக்கள் எல்லோருக்கு புது வழியை, நல் வழியை செல்லக் கூடிய உலக இலக்கியமாக திருக்குறள் உயர்ந்து நிற்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: உலக மக்கள் எல்லோருக்கு புது வழியை, நல் வழியை செல்லக் கூடிய உலக இலக்கியமாக திருக்குறள் உயர்ந்து நிற்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் நமக்கு மட்டுமல்ல, அனவருக்குமான நூல் என கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.